Enable Javscript for better performance
தாது மணல் விவகாரம்: எஸ்.பி.யிடம் மீனவர் விடுதலை இயக்கத்தினர் மனு- Dinamani

சுடச்சுட

    

    தாது மணல் விவகாரம்: எஸ்.பி.யிடம் மீனவர் விடுதலை இயக்கத்தினர் மனு

    By தூத்துக்குடி  |   Published on : 11th August 2013 02:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடற்கரையில் தாது மணல் அள்ளுவது தொடர்பான புகார் குறித்து உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி மீனவர் விடுதலை இயக்கத்தினர் சார்பில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சனிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

    மீனவர் விடுதலை இயக்கப் பொதுச்செயலர் வி. அலங்கார பரதர், தமிழர் களம் நிர்வாகி அமலரசு, வீராங்கனை அமைப்பைச் சேர்ந்த பாத்திமாபாபு, பரதர் நலச் சங்க நிர்வாகி பீட்டர் பர்னான்டோ உள்ளிட்ட பல்வேறு மீனவ அமைப்பினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மா. துரையிடம் சனிக்கிழமை அளித்த மனு விவரம்:

    தூத்துக்குடி மாவட்டம், வேம்பார், வைப்பாறு கடற்கரைப் பகுதியில் கடந்த 6-ஆம்  தேதி ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் விதிமுறை மீறல் குறித்து குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இந்தப் புகார் குறித்து இதுவரை எந்தவித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

    புகார் அளித்ததற்கான மனு ரசீது மட்டும் வழங்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதிகளில் 5 பிரிவுகளின் கீழ் விதிமுறைகள் மீறப்பட்டு தாது மணல் அள்ளப்பட்டதாக முன்னாள் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். எனவே,

    தாது மணல் எடுத்த விவகாரம் தொடர்பான புகார் குறித்து உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என மனுவில்

    தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai