Enable Javscript for better performance
நவீன எரிவாயு தகன மேடை கட்டடம் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டி நடராஜபுரத்தில் அமைந்துள்ள நவீன எரிவாயு தகன மேடை கட்டடத்தை, தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் திறந்து வைத்தார்.

    கோவில்பட்டி நகராட்சி சார்பில் நடராஜபுரத்தில் ரூ.42.60 லட்சம் செலவில் இக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. திறப்பு விழாவிற்கு நகர்மன்றத் தலைவி ஜான்சிராணி தலைமை வகித்தார். கோவில்பட்டி எம்.எல்.ஏ. கடம்பூர் செ.ராஜு முன்னிலை வகித்தார். தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் கட்டடத்தை திறந்து வைத்துப் பார்வையிடடார்.

    நகர்மன்ற துணைத் தலைவர் ராமர், நகராட்சி ஆணையர் வரதராஜ், பொறியாளர் கோவிந்தராஜ், சுகாதார அலுவலர் ராஜசேகரன், நகர அதிமுக செயலர் சங்கரபாண்டியன், நகர்மன்ற உறுப்பினர்கள் நவநீதகிருஷ்ணன், ஜார்ஜ், பத்மாவதி, ஜெமினி என்ற அருணாசலசாமி, சுந்தரராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai