பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
By தூத்துக்குடி, | Published on : 11th August 2013 02:18 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தூத்துக்குடியில் சனிக்கிழமை பெண்ணிடம் 5 பவுன் நகைகளை பறித்துச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி சிவந்தாகுளம்சாலை பகுதியைச் சேர்ந்தவர் பிரைட்டன். இவரது மனைவி கனிஷ்கா (26). வி.இ. சாலையில் உள்ள வணிக வளாகத்தில் பொருள்களை வாங்கிவிட்டு சனிக்கிழமை கனிஷ்கா சென்று கொண்டிருந்தாராம்.
அப்போது ரைஸ்மில் தெரு அருகே, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் திடீரென கனிஷ்கா அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனராம்.
தகவலறிந்ததும் மாநகர உதவி கண்காணிப்பாளர் பெஸ்கி தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து வழக்குப் பதிந்த தென்பாகம் போலீஸார் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.