Enable Javscript for better performance
மகனை தாக்கிய தந்தை கைது- Dinamani

சுடச்சுட

    

    :தட்டார்மடம் அருகே சொத்து தகராறில் மகனின் காதை அறுத்ததாக தந்தையை போலீஸார் சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.

    தட்டார்மடம் அருகேயுள்ள புத்தன்தருவைச் சேர்ந்தவர் ஞானராஜ் (60). விவசாயி. இவருக்கு ஒரு மகன் மற்றும் இரு மகள்கள் உள்ளனர். இவரது மகன் சாமுவேலுடன் (35), ஞானராஜ் இருந்து வருகிறாராம்.

    வெள்ளிக்கிழமை ஞானராஜிடம், சாமுவேல் சொத்தை பிரித்து தருமாறு தகராறு செய்தாராம்.  இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஞானராஜ், சாமுவேலின் காதை அறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சாமுவேல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து தட்டார்மடம் காவல் நிலைய சிறப்பு உதவி -ஆய்வாளர் தங்கதுரை வழக்குப்பதிந்து  ஞானராஜை சனிக்கிழமை கைது செய்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai