Enable Javscript for better performance
மின்சாரம் பாய்ந்து பெண் சாவு- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டியில் சனிக்கிழமை மின்சாரம் பாய்ந்து பெண் இறந்தார்.

    கோவில்பட்டி மில் தெருவைச் சேர்ந்தவர் ரவிக்கண்ணன். பால் வியாபாரி. இவரது மனைவி மகாலட்சுமி (27). இத்தம்பதிக்கு சரவணன் (8), விக்னேஷ் (5) என்ற இரு மகன்கள் உள்ளனர்.

    மகாலட்சுமி, டி.வி. பார்ப்பதற்காக சனிக்கிழமை வயரை எடுத்து ப்ளக்பாய்ன்டில் வைத்ததாகக் கூறப்படுகிறது. அப்போது மகாலட்சுமி மீது திடீரென மின்சாரம் பாய்ந்ததில் அவர் இறந்தார்.

    அவரது சடலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai