Enable Javscript for better performance
மிரட்டல் வழக்கு: இளைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டி- கடலையூர் சாலையில் பைக்கில் சென்றவரை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

    கோவில்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் பாஸ்கர் (45). பைக்கில், கடலையூர் சாலையில் சென்று கொண்டிருந்த இவரை இளைஞர் ஒருவர் வழிமறித்து பணம் கேட்டு மிரட்டினாராம்.  தகவலின்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார்,  அந்த இளைஞரைப் பிடித்தனர். விசாரணையில் அவர், கோவில்பட்டி சிந்தாமணி நகரைச் சேர்ந்த முருகன் மகன் முத்து (35) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai