முன்னாள் ஆட்சியர் மீது விசாரணை நடத்தவியாபாரிகள் சங்கம் கோரிக்கை
By தூத்துக்குடி, | Published on : 11th August 2013 02:19 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
வியாபாரிகளை பல்வேறு சிரமத்துக்குள்ளாக்கிய முன்னாள் மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கைகள் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் என, தூத்துக்குடி மத்திய வியாபாரிகள் சங்கத் தலைவர் யு. நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அவர் கூறியது:
தூத்துக்குடி மாவட்டத்தின் ஆட்சியராகப் பணியாற்றி தற்போது இடமாறுதலில் சென்னை சென்றுள்ள ஆஷிஷ்குமார், தூத்துக்குடி மாவட்ட மக்களுக்காக எந்தவித நல்ல செயல்களிலும் ஈடுபடவில்லை.
ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கினார். விதிமுறையை மீறி கட்டடங்கள் கட்டப்பட்டதாகக் கூறி சில கட்டடங்களை மட்டும் இடித்துவிட்டு, மற்ற கட்டட உரிமையாளர்களுக்கு சலுகை காட்டியதாகப் புகார் உள்ளது. எனவே, முன்னாள் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் மீதான புகார்கள் குறித்து சிபிசிஐடி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.