Enable Javscript for better performance
மூச்சுத் திணறல்: குழந்தை சாவு- Dinamani

சுடச்சுட

    

    :தூத்துக்குடியில் அளவுக்கு அதிகமாக தாய்ப்பால் குடித்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்ட குழந்தை வெள்ளிக்கிழமை இரவு இறந்தது.

    தூத்துக்குடி தாளமுத்துநகர் ஜாகிர்உசேன் நகரைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி இசக்கிராஜ் மனைவி ஆதிலட்சுமி (26). இவருக்கு 25 நாள்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது.

    இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு ஆதிலட்சுமி  குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளார். பின்னர் அக்குழந்தை மயங்கிய நிலையில் இருந்ததாம். இதையடுத்து குழந்தையை பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனராம்.

    இதுகுறித்து தாளமுத்துநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai