Enable Javscript for better performance
வருவாய்த் துறை அலுவலர்கள் சங்க கொடியேற்று விழா- Dinamani

சுடச்சுட

    

    வருவாய்த் துறை அலுவலர்கள் சங்க கொடியேற்று விழா

    By சாத்தான்குளம்  |   Published on : 11th August 2013 02:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாத்தான்குளத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்க கொடியேற்று விழா நடைபெற்றது.

    தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் 3.8.1964-ல் தொடங்கப்பட்டது.

    நிகழாண்டில் இச்சங்கம் 50-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி பொன்விழா ஆண்டாக மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த பொன்விழா ஆண்டு தொடக்க நாளையொட்டி சாத்தான்குளம் வட்டக்கிளை சார்பில் சங்க கொடியேற்று விழா நடைபெற்றது. வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற விழாவுக்கு சாத்தான்குளம் வட்டக்கிளைத் தலைவர் அ.சுவாமிநாதன் தலைமை வகித்தார். வட்டாட்சியர் பொ.மிகாவேல் ஞானதீபம் முன்னிலை வகித்தார். வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலர் து.செந்தூர்ராஜன் சங்க கொடியேற்றி இனிப்பு வழங்கினார்.  இதில் சாத்தான்குளம் அரசு ஊழியர்கள் சங்க வட்டத் தலைவர் தி.முருகன், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில பொதுக்குழு உறுப்பினர் பொன்சேகர் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai