Enable Javscript for better performance
வழக்குரைஞர் மீது தாக்குதல்:2  தலைமையாசிரியர்கள் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    வழக்குரைஞர் மீது தாக்குதல்:2  தலைமையாசிரியர்கள் மீது வழக்கு

    By கோவில்பட்டி,  |   Published on : 11th August 2013 02:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டி அருகே சனிக்கிழமை மோட்டார் சைக்கிளில் சென்ற வழக்குரைஞரை வழிமறித்து தாக்கியதாக பள்ளித் தலைமையாசிரியர்கள் இருவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து, அவர்களை தேடி வருகின்றனர்.

    கோவில்பட்டி ஏ.கே.எஸ். தியேட்டர் சாலையைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் செந்தாமரைக்கண்ணன். வழக்குரைஞரான இவர், மோட்டார் சைக்கிளில் வடக்குத் திட்டங்குளம் பஸ் ஸ்டாப் அருகே சென்று கொண்டிருந்தாராம். அப்போது, அயன்வடமலாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த தலைமையாசிரியர் கோபாலகிருஷ்ணன் மற்றும் அயன்கரிசல்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் சிவன் ஆகிய இருவரும் செந்தாமரைகண்ணனை வழிமறித்து தாக்கினார்களாம்.

    இதுகுறித்து வழக்குரைஞர் அளித்த புகாரின்பேரில், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, 2 தலைமையாசிரியர்களையும் தேடி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai