Enable Javscript for better performance
\\\"வாகன ஆய்வு: ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    "வாகன ஆய்வு: ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

    By 'தூத்துக்குடி,  |   Published on : 11th August 2013 02:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் வாகனங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் சோ. மதுமதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சாலைகளை மேம்படுத்தி போக்குவரத்தை சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தற்போதைய போக்குவரத்தின் நிலைகளை ஆய்வு செய்து மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    முதல்கட்டமாக வாகன உரிமையாளர்களையும், பஸ்களை பயன்படுத்துவோரையும் சந்தித்து ஆய்வுகள் நடத்தபட உள்ளன. இதற்காக டிமிட்ஸ் என்ற நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனப் பணியாளர்கள் தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் உள்ள சாலைகள் மற்றும் குடியிருப்புகளை ஆய்வு செய்கின்றனர்.

    இதற்காக அவர்கள் ஒவ்வொரு குடியிருப்புகளுக்கும் சென்று அங்குள்ளவர்களால் பராமரிக்கப்படும் இரு சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் குறித்த விவரங்களை சேகரிக்கின்றனர். எனவே பொதுமக்கள், ஆய்வு மேற்கொள்ளும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு தேவையான விவரங்களை வழங்கி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai