Enable Javscript for better performance
இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைப்பயணம்- Dinamani

சுடச்சுட

    

    இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைப்பயணம்

    By கோவில்பட்டி  |   Published on : 12th August 2013 12:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டி பசுமை இயக்கம், நேதாஜி விவேகானந்தா சேவா சங்கம் ஆகியவை சார்பில் இயற்கை விழிப்புணர்வு நடைப்பயணம், மரம் வளர்த்தல் மற்றும் கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    காந்தி மைதானத்தில் தொடங்கிய இந்த நடைப்பயணத்தை ஓய்வுபெற்ற பள்ளித் தலைமையாசிரியர் கோபாலகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்த நடைப்பயணம், மாதாங்கோவில் தெரு, பிரதான சாலை, செக்கடித் தெரு, செல்லப்பாண்டியன் நகர், சங்கரலிங்கபுரம், மூப்பன்பட்டி, சுந்தரலிங்கபுரம் வழியாக ஆவல்நத்தம் சென்றடைந்தது. ஆவல்நத்தத்தில் மாவட்ட கவுன்சிலர் லட்சுமணப்பெருமாள் தலைமையில், ஆவல்நத்தம் ஊராட்சித் தலைவர் சீனிவாசன் முன்னிலையில், மரக்கன்று நடும் விழா மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது.

    நடைப்பயணம் செல்லும் வழியில் மூப்பன்பட்டியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில், பசுமை இயக்கத் தலைவர் செம்மை நதிராஜா, செயலர் ஜெகஜோதி, நேதாஜி விவேகானந்தா சேவா சங்கத் தலைவர் நாகராஜன், கால்நடைத் துறை உதவியாளர் குமார், பள்ளி ஆசிரியர்கள் சிவக்குமார், பொன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai