Enable Javscript for better performance
கழுகுமலையில் கிணற்றில் தவறி விழுந்து முதியவர் காயம் - Dinamani

சுடச்சுட

    

    கழுகுமலையில் கிணற்றில் தவறி விழுந்து முதியவர் காயம்

    By கோவில்பட்டி  |   Published on : 12th August 2013 01:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கழுகுமலையில் ஞாயிற்றுக்கிழமை கிணற்றில் தூர்வாரும் பணியில் ஈடுபட்ட முதியவர் கயிற்றிலிருந்து தவறி விழுந்ததில் காயமடைந்தார்.

    பழங்கோட்டை நடுத்தெருவைச் சேர்ந்தவர் மு. போஸ்(60). இவர், அதே தெருவைச் சேர்ந்த கோபால்சாமி மகன் சங்கரலிங்கத்துக்கு சொந்தமான கிணற்றில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டாராம்.  அப்போது கயிற்றிலிருந்து கிணற்றுக்குள் தவறி விழுந்தாராம். கழுகுமலை தீயணைப்புப் படையினர் சென்று, போûஸ மீட்டு, கழுகுமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.  இதுகுறித்து கழுகுமலை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai