Enable Javscript for better performance
கோவில்பட்டியில் புதிய குடிநீர்க் குழாய் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டியில் புதிய குடிநீர்க் குழாய் திறப்பு

    By கோவில்பட்டி  |   Published on : 12th August 2013 01:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டி நகராட்சி சார்பில் 28-வது வார்டில் புதிய குடிநீர்க் குழாய் திறப்பு விழா நடைபெற்றது.

    வறட்சி நிவாரண நிதி திட்டத்தின் கீழ் ரூ.2.5லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறு மூலம் குடிநீர்க் குழாய் கதிரேசன் கோவில் சாலையில் அமைக்கப்பட்டது.

    அதன் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு, கோவில்பட்டி நகராட்சி ஆணையர் வரதராஜ் தலைமை வகித்தார். நகர்மன்ற துணைத் தலைவர் ராமர் மற்றும் கவுன்சிலர் ஜோதிபாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நகர்மன்றத் தலைவி ஜான்சிராணி புதிய குடிநீர்க் குழாயை திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர் ராஜேஷ்கண்ணன், நகர அதிமுக செயலர் சங்கரபாண்டியன், கவுன்சிலர்கள் பத்மாவதி, மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai