Enable Javscript for better performance
கோவில்பட்டியில் ஹிந்தி தேர்வு: 1,073 பேர் எழுதினர்- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டியில் ஹிந்தி தேர்வு: 1,073 பேர் எழுதினர்

    By கோவில்பட்டி,  |   Published on : 12th August 2013 12:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தட்சிண பாரத ஹிந்தி பிரசார் சபா சார்பில் கோவில்பட்டியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஹிந்தி தேர்வில் 1,073 பேர் பங்கேற்றனர்.

    தட்சிண பாரத் ஹிந்தி பிரசார் சார்பில் ஆண்டுதோறும் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஹிந்தி தேர்வுகள் நடைபெறுவது வழக்கம்.  தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி ஆகிய இரு மையங்களில் ஆகஸ்ட் மாதத் தேர்வு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றன.

    கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப் பள்ளியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதுநிலை தேர்வுகளான பிரவேஷிகா, விசாரத்உத்தராத், விசாரத்பூர்வாத், பிரவீன்உத்தராத், பிரவீன்பூர்வாத் ஆகிய தேர்வுகளை 361 பேரும், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கீழ்நிலைத் தேர்வுகளான பிராத்மிக், மத்யமா, ராஷ்ட்ரபாஷா ஆகிய தேர்வுகளை 712 பேரும் எழுதினர். மொத்தம் 1,073 பேர் ஹிந்தி தேர்வு எழுதினர்.

    தேர்வு மைய தலைமை கண்காணிப்பாளராக பள்ளித் தலைமையாசிரியை சுசிலாதேவியும், தேர்வு கண்காணிப்பாளர்களாக பள்ளி ஆசிரிய, ஆசிரியைகளும் செயல்பட்டனர். தேர்வுகளை கண்காணிப்பதற்கு பறக்கும் படைகளும் நியமிக்கப்பட்டிருந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai