Enable Javscript for better performance
சாத்தான்குளம் அருகே 2 குடிசைகள் தீக்கிரை- Dinamani

சுடச்சுட

    

    சாத்தான்குளம் அருகே 2 குடிசைகள் தீக்கிரை

    By சாத்தான்குளம்  |   Published on : 12th August 2013 01:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாத்தான்குளம் அருகே ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு குடிசைகள் எரிந்து சாம்பலானது.

    சாத்தான்குளம் அருகேயுள்ள பண்டாரபுரம் முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர்  செந்தில்குமார் (32). இவர் சென்னையில் தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டில் அவரது தந்தை ஆறுமுகலிங்கம் மற்றும் தாய் வசித்து வருகின்றனர். இவரது பக்கத்து வீட்டில் சேர்மராஜ் மனைவி ஜெயசுதா வசித்து வருகிறார்.

    ஞாயிற்றுக்கிழமை ஆறுமுகலிங்கம் மாட்டுக்கு தீவனம் வைத்து விட்டு, அவரது மனைவியுடன் ரேசன் கடைக்கு சென்றாராம். அப்போது மின்கசிவு ஏற்பட்டு திடீரென வீட்டில் தீப்பிடித்ததாம். காற்று பலமாக வீசியதால் பக்கத்து வீடான ஜெயசுதா வீட்டுக்கும் தீ பரவியதாம்.

    தகவலறிந்து வந்த சாத்தான்குளம் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் செந்தில்குமார் வீட்டில் இருந்த இரண்டு பைக், டிவி உள்ளிட்ட ரூ. 2 லட்சம் மதிப்புள்ள அனைத்து பொருள்களும் எரிந்து சேதமடைந்தன. இதில் பசுமாடு ஒன்றும் காயமடைந்தது. ஜெயசுதா வீடும் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai