Enable Javscript for better performance
சிறந்த பணியாளருக்கான விருது பெற அழைப்பு\\\' - Dinamani

சுடச்சுட

    

    தமிழக முதல்வரின் சிறந்த பணியாளருக்கான விருது பெற ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக முதல்வரின் சிறந்த பணியாளருக்கான விருது 2013-க்கு அரசு ஊழியர், ஊழியர்களின் குழுக்கள், சிறந்த அரசு அலுவலகம் ஆகியவற்றில் இருந்து மாவட்ட ஆட்சியரால் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அரசு துறைகளில் புதுமையான திட்டங்களை அறிமுகப்படுத்துவோர், நிலநடுக்கம், பெரிய விபத்துக்களில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் ஊக்க உணர்வை ஏற்படுத்தி சிறப்பாக பணிபுரிய செய்யும் தலைமைப் பண்புகள் கொண்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    விண்ணப்பங்களை ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் மாவட்ட சமூகநல அலுவலருக்கு அனுப்ப வேண்டும். மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், 5-ஏ டூவிபுரம் 11-வது தெரு, சங்கரநாராயணன்பிள்ளை பூங்கா பின்புறம், தூத்துக்குடி -3 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai