Enable Javscript for better performance
தூத்துக்குடி மேலூர் சக்தி பீடத்தில் கஞ்சிக் கலய ஊர்வலம்- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடி மேலூர் சக்தி பீடத்தில் கஞ்சிக் கலய ஊர்வலம்

    By தூத்துக்குடி,  |   Published on : 12th August 2013 01:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மேலூர் சக்தி பீடத்தில் மழைவளம் வேண்டியும், இயற்கைச் சீற்றங்கள் தனிய வேண்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்ட கஞ்சிக் கலய ஆன்மிக ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    தூத்துக்குடி 2-ம் ரயில்வேகேட் கனகசபாபதி தெருவில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா சக்தி பூஜை, குருபூஜை, விநாயகர் பூஜையுடன் தொடங்கியது.

    விழாவையொட்டி இயற்கைச் சீற்றங்கள் தனிய வேண்டியும், மழைவளம் வேண்டியும், மக்கள் வளமுடன் வாழவும் கலச விளக்கு வேள்வி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. வேள்வி பூஜையில் அறுங்கோண சக்கரம் அமைக்கப்பட்டு முக்கோண வடிவில் 3 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

    11 ராஜராஜேஸ்வரி கலசம் அமைக்கப்பட்டு, 1,008 மந்திரங்கள் கூறி தமிழில் அர்ச்சனை செய்தனர். கலச வேள்வி பூஜையை சக்தி பீடத் தலைவர் முத்துகுமார் தீபம் ஏற்றித் தொடங்கி வைத்தார்.

    இதையடுத்து, 5 ஆயிரம் செவ்வாடை அணிந்த மகளிர், ஆடவர், குழந்தைகள், பொதுமக்கள் பங்கேற்ற கஞ்சிக் கலய ஆன்மிக ஊர்வலம் நடைபெற்றது. 108 மகளிர் மற்றும் ஆடவர்கள் தீச்சட்டி ஊர்வலம், பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக சக்திபீடம் சென்றடைந்தனர்.

    பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த கஞ்சி அன்னைக்கு படைக்கப்பட்டு கஞ்சி வார்ப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai