Enable Javscript for better performance
நிதிநிறுவன ஊழியரைத் தாக்கிய வழக்கு: பாமக செயலர் உள்பட மூவர் கைது - Dinamani

சுடச்சுட

    

    நிதிநிறுவன ஊழியரைத் தாக்கிய வழக்கு: பாமக செயலர் உள்பட மூவர் கைது

    By தூத்துக்குடி  |   Published on : 12th August 2013 01:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடியில் நிதி நிறுவன ஊழியரைத் தாக்கியது தொடர்பாக பாமக மாநகரச் செயலர் உள்பட மூவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

    தூத்துக்குடி அய்யப்பன்நகரைச் சேர்ந்த சோமசுந்தரம் மகன் மணிகண்டன் (22). இவர், ஆண்டாள்தெருவில் உள்ள நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் தூத்துக்குடி மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராஜா (39) மோட்டார் சைக்கிள் ஒன்று வாங்கியிருந்தாராம்.

    இருப்பினும், அதற்கான மாதத் தவணையை ராஜா சரியாக செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, ராஜாவை சந்தித்த மணிகண்டன் பணத்தை சரியாக திருப்பிச் செலுத்துமாறு கூறினாராம். இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, ராஜா மற்றும் அவரது நண்பர்களான பாமக மாநகரச் செயலர் மு. சின்னத்துரை (39), மாநகரத் தலைவர் இசக்கிவேல் ஆகிய மூவரும் சேர்ந்து மணிகண்டனை தாக்கியதோடு கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டல் விடுத்தனராம்.

    இதுகுறித்து மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த வடபாகம் போலீஸார், பாமக மாநகரச் செயலர் சின்னத்துரை, தலைவர் இசக்கிவேல், ராஜா ஆகிய மூவரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai