Enable Javscript for better performance
பாதுகாக்கப்பட்ட குடிநீர்த் திட்டங்களுக்கு முன்னுரிமை- Dinamani

சுடச்சுட

    

    பாதுகாக்கப்பட்ட குடிநீர்த் திட்டங்களுக்கு முன்னுரிமை

    By ஸ்ரீவைகுண்டம்,  |   Published on : 12th August 2013 12:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாதுகாக்கப்பட்ட குடிநீர் திட்டங்களுக்கு தமிழக அரசு முன்னுரிமை அளிப்பதாக அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் கூறினார்.

    ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சிப் பகுதிகளுக்கான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திர திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் முத்து தலைமை வகித்தார். பேரூராட்சிகள் உதவி இயக்குநர் தர்மராஜ், திட்ட இயக்குநர் பெல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சித் தலைவர் அருணாசலம் வரவேற்றார்.

    குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை திறந்துவைத்து அமைச்சர் மேலும் பேசியதாவது:

    பாதுகாக்கப்பட்ட குடிநீர்த் திட்டங்களுக்கு தமிழக அரசு முன்னுரிமை கொடுத்து அதற்கான திட்டங்கள் அனைத்தையும் உடனடியாக நிறைவேற்றி வருகின்றது.

    உள்ளாட்சித் தேர்தலின்போது அனைத்துப் பகுதியிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும் என தமிழக முதல்வர் வாக்குறுதியளித்தை தற்போது நிறைவேற்றி வருகிறார்.  ஸ்ரீவைகுண்டத்தில் 30 ஆண்டுகளாக தாமிரவருணி ஆற்றுத் தண்ணீரை சுத்திகரிக்காமல் பயன்படுத்தி வந்தனர். தற்போது பேரூராட்சித் தலைவர் அருணாசலத்தின் கோரிக்கையை ஏற்று சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் இந்த குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.  இதற்கு தடையில்லா மின்சாரம் வழங்க புதிய மின்மாற்றியும் அமைக்கப்பட்டுள்ளது. இனி தடையில்லாமல் பாதுகாக்கப்பட்ட குடிநீர் பேரூராட்சிப் பகுதி மக்களுக்கு கிடைக்கும் என்றார் அவர்.

    பேரூராட்சி நிர்வாக அதிகாரி (பொறுப்பு) வேலுச்சாமி நன்றி கூறினார்.

    விழாவில் உதவி பொறியாளர் இர்வின்ஜெயராஜ், உதவி செயற் பொறியாளர் சீதாமோகன், மின்வாரிய பொறியாளர்கள் சரவணன், கிருஷ்ணகுமார், ஆழ்வார்திருநகரி பேரூராட்சித் தலைவர் ஆதிநாதன், ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சித் துணைத் தலைவர் மாரிமுத்து, மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல், வழக்குரைஞர் சங்கத் தலைவர் கருப்பசாமி, முன்னாள் ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத் தலைவர் ஆறுமுகநயினார், கருங்குளம் ஒன்றியச் செயலர் சிவசுப்பிரமணியன், ஸ்ரீவைகுண்டம் நகரச் செயலர் பால்துரை, ஒன்றிய மாணவரணிச் செயலர் சிவராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai