Enable Javscript for better performance
விலையில்லா மிதிவண்டி அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

      பூதலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில்  பிளஸ் 1 பயிலும் மாணவர், மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது.

    பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியை அந்தோனியம்மாள் தலைமை வகித்தார்.

    மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் தெய்வேந்திரன், புதூர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் வெம்பூரார், பூதலபுரம் முன்னாள் ஊராட்சித் தலைவர் வெள்ளைச்சாமி, ஊராட்சித் தலைவர் தனராஜ், ஒன்றியச் செயலர் ஞானகுருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில், விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, பிளஸ் 1 பயிலும் மாணவர், மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டியை வழங்கிப் பேசினார்.

    ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் பீர்முகமது, தங்கவனஜா, பத்மநாதன், மணி, ஷீபாராணி ஆகியோர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai