Enable Javscript for better performance
\\\"இசையின் ஆழம் அறிய முடியாது\\\'- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடியில் திரைப்பட பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    தூத்துக்குடி மாவட்ட பி. சுசீலா பாடல் மன்றம், காந்திய சேவா மன்றம் ஆகியவை சார்பில் இவ் விழா நடைபெற்றது. விழாவில் பி.சுசீலா பேசுகையில், கடலின் ஆழத்தை தெரிந்துவிடலாம். ஆனால், இசையின் ஆழம் தெரியாது. அலைகள் ஓய்வது இல்லை. அதேபோல பாடல்களும் ஓய்வது இல்லை. 50 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள பாடல்களுக்கும் இப்போது கூட மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது

    என்றார்.

    விழாவின்போது அவருக்கு மலர் கிரீடம் அணிவித்து, அவரது அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சம் ரொக்கமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து, திரைப்படங்களில் பி. சுசீலா பாடிய பாடல்களை அவரது மருமகள் சந்தியா, மருத்துவர் பிரேம சந்திரன் உள்ளிட்ட பாடகர்கள் மேடையில் பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.பின்னர், விழா மலர் வெளியிடப்பட்டது. மாவட்ட கூடுதல் நீதிபதி பால்துரை, வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் செங்குட்டுவன், தொழிலதிபர்கள் விநாயகமூர்த்தி, டி.ஏ. தெய்வநாயகம், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி துணைப் பொது மேலாளர் கிருஷ்ணகுமார், காந்திய சேவா மன்ற நிர்வாகிகள் பரமசிவன், ராஜேந்திரபூபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai