Enable Javscript for better performance
இந்து அன்னையர் முன்னணி மாநில செயற்குழுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    இந்து அன்னையர் முன்னணி மாநில செயற்குழுக் கூட்டம்

    By திருச்செந்தூர்  |   Published on : 13th August 2013 01:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்செந்தூரில் இந்து அன்னையர் முன்னணி முதல் மாநில செயற்குழுக் கூட்டம் 2 நாள்கள் நடைபெற்றது.

    திருச்செந்தூர் சபாபதிபுரம் தெருவில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, இந்து அன்னையர் முன்னணி தூத்துக்குடி மாவட்டத் தலைவர் பட்டுக்கனி தலைமை வகித்தார்.சித்ரா,ஜோதிலட்சுமி, அமுதா ரஜினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் இந்து முன்னணி மாநிலச் செயலர் சு.வெள்ளையப்பன், பாஜக மாநில பொதுச்செயலர் ஆடிட்டர் ரமேஷ் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கோவில்களில் தரிசனக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். பசு வதை தடைச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசு இந்து மாணவர், மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும்.

    தமிழக அரசு நில மோசடி வழக்குகளுக்கு தனிப்பிரிவு ஏற்படுத்தியது போல, மத மோசடிகளுக்கும் தனிப்பிரிவு ஏற்படுத்த வேண்டும். மதச் சின்னங்களை அணிந்து வரக்கூடாது என்று கூறும் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    இந்து முன்னணி மாநிலத் தலைவர் அரசு ராஜா, மாநில அமைப்பாளர் ந.முருகானந்தம், மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார், இணை அமைப்பாளர்கள் மூர்த்தி, பொன்னையா, கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், தூத்துக்குடி மாவட்டப் பொதுச் செயலர் பெ.சக்திவேலன், தெற்கு மாவட்டத் தலைவர் வி.எஸ்.முருகேசன், மாநில நிர்வாக குழு உறுப்பினர் மாயக்கூத்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai