Enable Javscript for better performance
ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியக் கூட்டம்

    By ஓட்டப்பிடாரம்,  |   Published on : 13th August 2013 01:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ரா.காமாட்சி என்ற காந்தி தலைமை வகித்தார். ஆணையர் சசிசிவானந்தம் முன்னிலை வகித்தார்.

    9-வது வார்டு உறுப்பினர் மு.முருகேசன் பேசுகையில்,கீழவேலாயுதபுரத்தில் இயங்கி வரும் தனியார் மின் உற்பத்தி நிறுவனம் லைசென்ஸ் பெறாமல் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தால் 2 கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, அந்த நிறுவனம் மீது கடும் நடவடிக்கை வேண்டும் என்றார்.

    இதற்கு பதிலளித்த ஆணையர் சசிசிவானந்தம், உறுப்பினர்கள் ஆதரவோடு தீர்மானம் நிறைவேற்றலாம் என்றார்.

    அனைத்து உறுப்பினர்களும் எழுந்து ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் பரிந்துரைப்போருக்கு, பசுமை வீடுகள் ஒதுக்கீடு செய்ய ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    ஒன்றியக் குழுத் தலைவர் ரா.காமாட்சி என்ற காந்தி பேசியதாவது: ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் சிமெண்ட் ரோடு, சோலார் விளக்குகள் மற்றும் குடிநீர்த் திட்டங்கள் உள்பட ரூ. 2 கோடியில் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai