Enable Javscript for better performance
கல்லூரியில் பட்டமளிப்பு விழா- Dinamani

சுடச்சுட

    

    :கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியின் 14-வது பட்டமளிப்பு விழா கல்லூரி கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

    கல்லூரிச் செயலர் ஆர்.எஸ்.ரமேஷ் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் கதம்பராஜன் முன்னிலை வகித்தார்.  மாணவர்-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி, மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் முனைவர் அழகேசன் பேசியதாவது: வாழ்க்கை பயணத்தில் கிடைக்கிற எந்த வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வேலைவாய்ப்பை தேடி அழையாது, சுய வேலைவாய்ப்புகளிலும் கவனம் செலுத்தி முன்னேறலாம். வாசிப்பு, மனிதனை முழு மனிதனாக்கி முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும். வாழ்வில் முன்னேற லட்சியங்கள், குறிக்கோள்கள் வேண்டும் என்றார் அவர்.

    இவ் விழாவில், கல்லூரியின் 6 துறைகளைச் சேர்ந்த 194 மாணவர், மாணவிகளுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன. கல்லூரி நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மாணிக்கம், மகேஷ், தனபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai