Enable Javscript for better performance
களையிழந்து நிற்கும் கட்டபொம்மன் கோட்டை- Dinamani

சுடச்சுட

    

    களையிழந்து நிற்கும் கட்டபொம்மன் கோட்டை

    By ஓட்டப்பிடாரம்,  |   Published on : 13th August 2013 01:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டியகட்டபொம்மன் கோட்டையில் உள்ள மரங்கள், கொரியன்கிராஸ் வகை புற்கள் போதிய தண்ணீரின்றி கருகி வருகின்றன. இதனால் கட்டபொம்மன் கோட்டை களையிழந்து வருகிறது.

    வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவாக 1972-ம் ஆண்டு தமிழக அரசால் கோட்டை எழுப்பப்பட்டது. கோட்டையைக் காண தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் வருகைதருகின்றனர்.

    பழைய கோட்டையை தொல்லியல் துறையும், நினைவுக் கோட்டையை சுற்றுலாத் துறையும் பாராமரித்து வருகின்றன. கோட்டையை அழகுபடுத்துவதற்காக கோட்டையைச் சுற்றி ரூ.24.50 லட்சம் செலவில் உயர்ரக கொரியன்கிராஸ் வகை புல்தரை அமைக்கப்பட்டது.

    இப்போது போதிய பராமரிப்பின்மையால் கொரியன் வகைப் புற்கள் முற்றிலும் கருகிவிட்டன. 2007-ம் ஆண்டு ரூ.15 லட்சம் செலவில் பூங்கா மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. இருப்பினும் போதிய தண்ணீர் கிடைக்காததால் புற்களும், மரங்களும் கருகி வருகின்றன.

    எனவே, மாவட்ட நிர்வாகம் பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்கு நிரந்தர தண்ணீர் வசதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்றுலாப் பயணிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai