Enable Javscript for better performance
கைப்பந்து போட்டி: வென்றோருக்கு பரிசு- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

    தூத்துக்குடி மாவட்ட கைப்பந்துக் கழகம் மற்றும் ஜிம்கானா கிளப் இணைந்து நடத்திய 23-வது மாவட்ட அளவிலான மாணவர், மாணவிகளுக்கான கைப்பந்து போட்டி அண்மையில் நடைபெற்றது.  இந்தப் போட்டியில் 41 மாணவர்கள் அணியும், 16 மாணவிகள் அணியும் கலந்துகொண்டன.

    14 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில் கால்டுவெல் மேல்நிலைப் பள்ளி அணியும், 17 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில் புனித லசால் மேல்நிலைப் பள்ளி அணியும், 19 வயதிற்குள்பட்டோருக்கான பிரிவில் தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளி அணியும் முதலிடத்தைப் பிடித்தன.

    மாணவிகளுக்கான 14 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில் தூத்துக்குடி ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அணியும், 17 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில் சாயர்புரம் செயின்ட் மேரீஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அணியும், 19 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில் சாயர்புரம் செயின்ட் மேரீஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அணியும் முதலிடத்தைப் பிடித்தன.

    தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், மாவட்ட விளையாட்டு அலுவலர் க. சேவியர் ஜோதி சற்குணம், தென்பாகம் காவல் ஆய்வாளர் கிங்ஸ்லி தேவானந்த் ஆகியோர் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினர்.

    தூத்துக்குடி மாவட்ட கைப்பந்துக் கழகத் தலைவர் ஜான் வசீகரன், செயலர் ரமேஷ் குமார், ஜிம்கானா கிளப் தலைவர்  முரளீதரன், பொதுச் செயலர் அனுப்சந்த் தனுஷ் குமார், கைப்பந்து பிரிவுச் செயலர்  சுஜேஷ் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai