Enable Javscript for better performance
சாலையில் அறுந்து விழுந்த மின்கம்பியால் போக்குவரத்து பாதிப்பு- Dinamani

சுடச்சுட

    

    சாலையில் அறுந்து விழுந்த மின்கம்பியால் போக்குவரத்து பாதிப்பு

    By ஆறுமுகனேரி,  |   Published on : 13th August 2013 01:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆறுமுகனேரி அருகே உயர் அழுத்த மின் கம்பி அறுந்து சாலையில் விழுந்ததால் திங்கள்கிழமை காலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தூத்துக்குடியிலிருந்து சாகுபுரத்திலுள்ள ஆறுமுகனேரி துணை மின்நிலையத்துக்கு மின்சாரம் கொண்டு வரும் 110 கிலோ வோல்ட் மின் திறன் கொண்ட, உயர் மின் அழுத்த மின்கம்பி ஆறுமுகனேரியையடுத்த சாகுபுரம் பாலத்துக்கு அருகில் தூத்துக்குடி-திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை காலையில் அறுந்து விழுந்தது. இதனால் அந்தச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆறுமுகனேரி காவல் துறையினரும், மின்வாரிய அதிகாரிகளும் சம்பவ இடத்துக்குச் சென்று, போக்குவரத்தை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். சுமார் 1 மணி நேரத்துக்குப் பின்பு போக்குவரத்து சீரானது.

    இதே பகுதியில் இதே போன்று உயர் அழுத்த மின்கம்பி சனிக்கிழமை இரவு அறுந்து விழுந்ததால் சுமார் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai