Enable Javscript for better performance
தந்தையை கொலை செய்த இளைஞர் திருச்செந்தூர் நீதிமன்றத்தில் சரண் - Dinamani

சுடச்சுட

    

    தந்தையை கொலை செய்த இளைஞர் திருச்செந்தூர் நீதிமன்றத்தில் சரண்

    By சாத்தான்குளம்  |   Published on : 13th August 2013 01:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாத்தான்குளத்தில் தந்தையை கொலை செய்த இளைஞர், திருச்செந்தூர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரண் அடைந்தார்.

    சாத்தான்குளம் அருகேயுள்ள கூவைக்கிணற்றைச் சேர்ந்தவர் ந.ரெங்கன் (48). முதல் மனைவி இந்திராவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், 2-வது மனைவி வீட்டில் ரெங்கன் வசித்து வந்தாராம்.

    இதுதொடர்பாக ரெங்கனுக்கும், அவரது மகன் முத்துப்பாண்டிக்கும் (20) தகராறு ஏற்பட்டதாம். ஆறுமங்கலம் வேம்படி சுடலைமாட சுவாமி கோவில் முன்பு ஞாயிற்றுக்கிழமை தூங்கிக் கொண்டிருந்த ரெங்கனை, முத்துப்பாண்டி அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் அவர் இறந்தார்.

    இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸார் வழக்குப்பதிந்து, முத்துப்பாண்டியை தேடி வந்தனர். இந்நிலையில் அவர், திருச்செந்தூர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரண் அடைந்தார். அவரை, 15 நாள்கள் காவலில் வைக்க நீதிபதி நம்பிராஜன் உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai