Enable Javscript for better performance
மதுவில், பெட்ரோல் கலந்து குடித்த சலவை தொழிலாளி சாவு - Dinamani

சுடச்சுட

    

    மதுவில், பெட்ரோல் கலந்து குடித்த சலவை தொழிலாளி சாவு

    By சாத்தான்குளம்  |   Published on : 13th August 2013 01:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாத்தான்குளம் அருகே மதுவில் பெட்ரோல் கலந்து குடித்த சலவைத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.

    சாத்தான்குளம் அருகேயுள்ள முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் சு. கிருஷ்ணமூர்த்தி (27). இவருக்கு திருமணமாகி குழந்தை இல்லையாம். இவரது சகோதரரும் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தாராம். இந்நிலையில், இட்டமொழி சாலையில் உள்ள கல்லூரியின் பின்புறம் மதுவில், பெட்ரோலை கலந்து குடித்து கிருஷ்ணசாமி சனிக்கிழமை மயங்கி கிடந்தாராம். அவரை, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் ஞாயிற்றுக்கிழமை இறந்தார். இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai