Enable Javscript for better performance
ரத்த தான முகாம்- Dinamani

சுடச்சுட

    

    :கோவில்பட்டி ஆர்.சி. தேவாலய வளாகத்தில், கத்தோலிக்க இளைஞர் இயக்கம் சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

    ஆலய பங்குத்தந்தை பீற்றர் அடிகளார் தலைமை வகித்து, முகாமை தொடங்கிவைத்தார். உதவிப் பங்குத்தந்தை பிரான்சிஸ்சேவியர், பங்கு பேரவை துணைத் தலைவர் சின்னத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கோவில்பட்டி, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் கமலவாசன் தலைமையில், செவிலியர்கள் ஜானகி, ஜோதி ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் 20 பேரிடமிருந்து ரத்தத்தை சேகரித்தனர்.

    அப்துல்கலாம் ரத்த தான கழகத் தலைவர் ராஜேந்திரன், நகர்மன்ற உறுப்பினர் ஏஞ்சலா சின்னத்துரை, கத்தோலிக்க இளைஞர் இயக்க உறுப்பினர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.ஏற்பாடுகளை கத்தோலிக்க இளைஞர் இயக்கத் தலைவர் வழக்குரைஞர் வளன் செய்திருந்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai