Enable Javscript for better performance
விநாயகர் சதுர்த்தி ஆலோசனைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம், காயல்பட்டினத்தில் உள்ள ரத்னாபுரி ஸ்ரீ அழகியமனவாள பெருமாள் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    நகர இந்து முன்னணி தலைவர் வி.ஆகாசமுத்து தலைமை வகித்தார். திருச்செந்தூர் ஒன்றிய (தெற்கு) தலைவர் கே.ஜெய்சிங், பா.ஜ.க. நிர்வாகி யு.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவர் ஆர்.எஸ்.சுந்தரவேல் பேசினார்.

    காயல்பட்டினத்தில் விநாயகர் சதுர்த்தி விழாக் குழுத் தலைவராக ஏ.பண்டாரம், துணைத் தலைவராக என்.மகேஷ்கண்ணன், செயலர்களாக செல்வகுமார், இ.பேச்சிமுத்து, நிர்வாகக் குழு உறுப்பினர்களாக எம்.என்.சக்திவேல், மணிகண்டன், வெற்றிவேல், வேம்படிமுத்து, எஸ்.ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai