Enable Javscript for better performance
விபத்து: இருவர் பலத்த காயம்- Dinamani

சுடச்சுட

    

    ஆறுமுகனேரியில், கனிம மணல் கொள்ளை குறித்து விசாரிக்க வந்துள்ள ஆய்வுக் குழுவினர் சென்ற வாகனம் மோதி இருவர் காயமடைந்தனர்.

    ராமநாதபுரம் வருவாய் அலுவலர் லாரன்ஸ் தலைமையில் அரசு சிறப்பு குழுவினர், மணப்பாடு பகுதியில் ஆய்வு மேற்கொள்ள திங்கள்கிழமை சென்றனர். ஆறுமுகனேரி-அடைக்கலாபுரம் சாலையில்  விருதுநகர் நில அளவை உதவி இயக்குநர் வேலு வந்த ஜீப்பும், எதிரே வந்த பைக்கும் மோதியதாகக் கூறப்படுகிறது.

    இதில், பைக்கில் வந்த கீழசண்முகபுரத்தைச் சேர்ந்த  மாடசாமி (52), பெரியான்வினை சுயம்புத்துரை (30) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai