Enable Javscript for better performance
வில்லிசேரியில் வளைகாப்பு விழா- Dinamani

சுடச்சுட

    

    வில்லிசேரியில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் வளைகாப்பு விழா நடைபெற்றது.

    இவ் விழாவுக்கு ரோட்டரி சங்கத் தலைவர் வீராச்சாமி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் விநாயகா ரமேஷ் பேசினார்.கோவில்பட்டி சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் போஸ்கோராஜா முகாமை தொடங்கிவைத்தார்.  ஆவல்நத்தம் கிராம சுகாதார செவிலியர் ஜானகி,  மருத்துவ அலுவலர் கமல்குமார் ஆகியோர் பேசினர். மாவட்ட தாய்சேய் நல அலுவலர் பத்மசாலா, கர்ப்பிணிகளுக்கான வளைகாப்பு நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.சுகாதார ஆய்வாளர்கள் மாரிமுத்து, சின்னத்தம்பி, ரோட்டரி சங்க உறுப்பினர்கள் சீனிவாசன், பரமேஸ்வரன், மாரியப்பன், பத்மநாபன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    முன்னதாக தோணுகால் துணை சுகாதார மைய சுகாதார செவிலியர் பேச்சியம்மாள் வரவேற்றார். ரோட்டரி சங்கச் செயலர் ஜெயப்பிரகாஷ்நாராயணசாமி நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai