Enable Javscript for better performance
ஆறுமுகனேரி புனித அன்னம்மாள் ஆலயத் திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    ஆறுமுகனேரி புனித அன்னம்மாள் ஆலயத் திருவிழா

    By ஆறுமுகனேரி,  |   Published on : 14th August 2013 02:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆறுமுகனேரி புனித அன்னம்மாள் ஆலயத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    ஆறுமுகனேரி கீழசண்முகபுரம் புனித அன்னம்மாள் ஆலயத் திருவிழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் மாலை திருப்பலியும், மறையுரையும் நடைபெற்றது. 9ஆம் திருவிழாவான சனிக்கிழமை மடத்துவிளை புனித சவேரியார் ஆலயத்தில் இருந்து ஊர் கமிட்டித் தலைவர் அமிர்தம் பர்ணாந்து தலைமையில் புனித அன்னம்மாள் திருஉருவ சப்பர பவனி நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியே புனித அன்னம்மாள் ஆலயத்துக்கு சப்பரம் வந்ததும் அங்கு திருவிழா ஆடம்பர மாலை ஆராதனை நடைபெற்றது. பின்னர் அன்னம்மாள் திருஉருவ சப்பரம் மீண்டும் பிரதான வீதி வழியாக சவேரியார் ஆலயம் வந்தடைந்தது.

    ஞாயிற்றுக்கிழமை காலை திருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. பங்குத்தந்தை ரூபர்ட் அருள்வளன், துணை பங்குத்தந்தை இருதயராஜ் மற்றும் தூத்துக்குடி நற்செய்தி நடுவம் இணை இயக்குநர் யோகராஜ் ஆகியோர் நடத்தினர்.  திருவிழா நிகழ்ச்சியில் ஆத்தூர், சேர்ந்தபூமங்கலம், குரும்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து திரளான ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai