Enable Javscript for better performance
ஆறுமுகனேரி ஸ்ரீபத்திரகாளி அம்மன் கோவில் கொடைவிழா- Dinamani

சுடச்சுட

    

    ஆறுமுகனேரி ஸ்ரீபத்திரகாளி அம்மன் கோவில் கொடைவிழா

    By ஆறுமுகனேரி,  |   Published on : 14th August 2013 12:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆறுமுகனேரி பிரதான வீதியில் அமைந்திருக்கும் ஸ்ரீபத்திரகாளி அம்பாள் திருக்கோவில் கொடை விழா 3 தினங்கள் நடைபெற்றது.

     ஞாயிற்றுக்கிழமை காலை ஸ்ரீகணபதிஹோமமும் அதன் பின்னர் வருஷாபிஷேகமும் நடைபெற்றது. அன்றிரவு திருவிளக்குபூஜையும் நள்ளிரவில் சந்தனகாப்பு அலங்கார பூஜையும் நடைபெற்றது.

    திங்கள்கிழமை இரவு சிறப்பு பூஜையும், பக்தி இன்னிசையும் நள்ளிரவில் மாகாப்பு அலங்கார பூஜையும் நடைபெற்றது. கொடை விழாவான செவ்வாய்க்கிழமை நண்பகல் உச்சிகால பூஜையும், மதியம் அன்னதானமும், இரவில் சிறப்பு பூஜையும் நடைபெற்றது. இரவில் முளைப்பாரி ஊர்வலமும் நள்ளிரவில் சாமக்கொடை பூஜையும் சிறப்பு அலங்கார தீபாரதனைகளும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai