Enable Javscript for better performance
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவில்பட்டி நகர, வட்டக் குழு சார்பில் உறுப்பினர் அட்டை வழங்கும் விழா மற்றும் பேரவைக் கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்துக்கு கோவில்பட்டி நகரச் செயலர் பரமராஜ் தலைமை வகித்தார். தாலுகா செயலர் சேதுராமலிங்கம் முன்னிலை வகித்தார்.

    கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான அழகிரிசாமி அடையாள அட்டையை உறுப்பினர்களுக்கு வழங்கிப் பேசினார். தொடர்ந்து, கட்சியின் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில், மாவட்டச் செயலர் மோகன்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அய்யலுசாமி, ராஜேந்திரன், மாநிலக் குழு உறுப்பினர் அழகுமுத்துபாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நல்லையா, தமிழரசன், பாலமுருகன் ஆகியோர்

    பேசினர்.

    கூட்டத்தில், கிளைச் செயலர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai