Enable Javscript for better performance
திருச்செந்தூர் கிருஷ்ணன் கோவிலில் ஆடி சுவாதி பால்குடம்- Dinamani

சுடச்சுட

    

    திருச்செந்தூர் கிருஷ்ணன் கோவிலில் ஆடி சுவாதி பால்குடம்

    By திருச்செந்தூர்,  |   Published on : 14th August 2013 12:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்செந்தூர் ஸ்ரீ கல்யாண கிருஷ்ணன் கோவிலில் ஆடி சுவாதியை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனர்.

    திருச்செந்தூர் அருள்மிகு ருக்மணி சத்ய பாமா சமேத கல்யாண கிருஷ்ணன் கோவிலில் ஆடி சுவாதியை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது.

    தொடர்ந்து காலை 8 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து திருவீதி வலம் வந்து கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து அருள்மிகு ருக்மணி சத்ய பாமா சமேத கல்யாண கிருஷ்ணன் மற்றும் ஆஞ்சநேயருக்கு அபிஷேக அலங்கார, தீபாராதனை நடைபெற்றது. மதியம் அன்னதானம் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் பொறியாளர் கி.நாராயணன், நடராஜன், கி.வெங்கடேசன், நம்மாழ்வார், மயில் மணி, சுந்தர்ராஜ் உள்ளிட்ட பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai