Enable Javscript for better performance
ஆக.20-க்குள் தாட்கோ மூலம் மானியத்துடன் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்- Dinamani

சுடச்சுட

    

    ஆக.20-க்குள் தாட்கோ மூலம் மானியத்துடன் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்

    By தூத்துக்குடி,  |   Published on : 15th August 2013 02:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மாவட்டத்தில் தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விரும்புவோர் ஆகஸ்ட் 20 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எம். ரவிகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    தாட்கோ மூலம் ஆதிதிராவிடர்கள் மானியத்துடன் கூடிய உதவித்தொகை பெற ஆகஸ்ட் 10- ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பொதுமக்களின் தேவைக்காக, தற்போது ஆகஸ்ட் 20-ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இந்தத் திட்டத்தில் பயன் பெற விரும்பும் ஆதி திராவிடர்கள் விண்ணப்பிக்க தகுதிவாய்ந்தோர், உரிய ஆவணங்களுடன் ஜ்ஜ்ஜ்.ஹல்ல்ப்ண்ஸ்ரீஹற்ண்ர்ய்.ற்ஹட்க்ஸ்ரீர்.ஸ்ரீர் என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யவும்.

    இதில், குடும்ப அட்டை அல்லது இருப்பிடச் சான்று, ஜாதிச் சான்று, குடும்ப ஆண்டு வருமானச் சான்று ஆகியவற்றின் எண், வழங்கப்பட்ட தேதி, ஆகியவற்றை உரிய இடத்தில், பதிவு செய்ய வேண்டும்.

    மேலும், திட்ட அறிக்கை பெறப்பட்ட தேதியை உரிய இடத்தில் குறிப்பிட வேண்டும். புகைப்படத்தை ஸ்கேன் செய்து, பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த கால அவகாசத்தை, ஆதிதிராவிட மக்கள் பயன்படுத்திக் கொண்டு, சலுகை பெற விரைவில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai