Enable Javscript for better performance
ஆத்தூரில் அம்மா திட்ட முகாம்- Dinamani

சுடச்சுட

    

    திருச்செந்தூர் வட்டம் ஆத்தூரில், ஆத்தூர் கஸ்பா மற்றும் மேலாத்தூர் வருவாய் கிராமங்களுக்கான அம்மா திட்ட முகாம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

    ஆத்தூர் வருவாய் கிராமத்திற்கான முகாம் ஆத்தூர் பேரூராட்சி மன்ற அலுவலக சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. அம்மா திட்ட முகாமினை பேரூராட்சி மன்ற தலைவர் முருகானந்தம் துவக்கி வைத்தார். துணைத்தலைவர் ஆண்டியப்பன் என்ற கண்ணன் முன்னிலை வகித்தார். இதில் முதியோர் உதவித்தொகை கேட்டு 90 பேரும், பட்டா கேட்டும் 50 பேரும், குடும்பஅட்டை கேட்டு 95 பேரும் மனு கொடுத்தனர். மேலும் பெயர் மாற்றத்திற்கென 50 மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக திருத்தம் செய்யப்பட்டது.

    முகாமில் தாசில்தார் இம்மானுவேல் ஜெயக்குமார், அலுவலக உதவியாளர்கள் கிதிர்முகைதீன், முரளிதரன், ராமகிருஷ்ணன், வெயிலுகந்தநாயகி, ராஜேஸ்வரி, ஆத்தூர் வருவாய் ஆய்வாளர் வசந்தா, கிராம நிர்வாக அலுவலர் சுமித்ரா உள்பட அதிகாரிகள் பங்கேற்று பொதுமக்கள் மனுக்களை பரிசீலித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai