ஓட்டப்பிடாரத்தில் நாளை மாற்றுத் திறனுடைய குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்
By ஓட்டப்பிடாரம் | Published on : 15th August 2013 02:28 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
ஓட்டப்பிடாரத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத் திறனுடைய குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை (ஆக. 16) நடைபெறுகிறது.
இதில் மாற்றுத் திறனுடைய குழந்தைகள் கலந்துகொண்டு பயனடையலாம் என அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார மேற்பார்வையாளர் ஏ.விஜயன் தெரிவித்துள்ளார். அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் வெள்ளிக்கிழமை ஓட்டப்பிடாரம் வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள வட்டார வளமையத்தில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெறுகிறது. முகாமுக்கு ஓட்டப்பிடாரம் ஒன்றியக்குழுத் தலைவர் ரா.காமாட்சி என்ற காந்தி தலைமை வகிக்கிறார். உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஏ.முருகன், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் எஸ்.எம்.கணேசன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாமை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை கிருஷ்ணசாமி எம்எல்ஏ வழங்குகிறார்.