Enable Javscript for better performance
ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருச்செந்தூரில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கக் கூட்டம் நடைபெற்றது.

    திருச்செந்தூர் ஸ்ரீ சரவணய்யர் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்துக்கு வட்டத் தலைவர் க.மெய்கண்டமுத்து தலைமை வகித்தார். சிவன் பிள்ளை, வி.கணேசன், சி.சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அரசு ஆணை எண் 371-ஐ அமல்படுத்த வேண்டியும், மருத்துவப்படி ரூ. 500 ஆகவும், மருத்துவ நல நிதியை ரூ. 3 லட்சமாகவும், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 3,050 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் வட்டச் செயலர் எம்.ராமசந்தர் ரபேல், சத்தியமூர்த்தி, குணசேகரபாண்டியன், பால்சிங் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். துரைப்பாண்டியன் நன்றி கூறினார்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai