Enable Javscript for better performance
டாக் தொழிற்சாலை ஊழியர்கள் மனிதச் சங்கிலி- Dinamani

சுடச்சுட

    

    டாக் தொழிற்சாலை ஊழியர்கள் மனிதச் சங்கிலி

    By தூத்துக்குடி,  |   Published on : 15th August 2013 02:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    டாக் தொழிற்சாலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி, தூத்துக்குடி முத்தையாபுரத்தில் புதன்கிழமை டாக் ஊழியர்கள் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தூத்துக்குடி முத்தையாபுரத்தில் ஸ்பிக் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வந்த டாக் தொழிற்சாலை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் திடீரென மூடப்பட்டது. இதையடுத்து, டாக் தொழிற்சாலையை மீண்டும் திறக்க வேண்டும், தொழிற்சாலையை அரசு ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி டாக் எம்ப்ளாய்ஸ் யூனியன் சார்பில் முத்தையாபுரத்தில் புதன்கிழமை மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. முத்தையாபுரம் பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலையோரத்தில் அணிவகுத்து நின்றனர்.

    மேலும், தங்களது கோரிக்கைகளை சிறிய அட்டையில் எழுதி அதனை கழுத்தில் தொங்கவிட்டப்படி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டாக் எம்ப்ளாய்ஸ் யூனியன் தலைவர் துரையரசன், பொதுச் செயலர் துரை உள்பட பலர் மனிதச் சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai