Enable Javscript for better performance
தூத்துக்குடியில் ஆக. 17-ல் மின்தடை- Dinamani

சுடச்சுட

    

      தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை (ஆக. 17) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தூத்துக்குடி நகர மின் விநியோக செயற்பொறியாளர் புருஷோத்தமன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக, சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    அதன்படி, தூத்துக்குடி மாநகரப் பகுதியில்  ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, போல்பேட்டை, 1-ம் ரயில்வே கேட், 2-ம் ரயில்வே கேட், மட்டக்கடை, தெப்பகுளம், சிவன்கோவில் தெரு, டபுள்யூ.ஜி.சி சாலை, ஜார்ஜ் சாலை, சிவந்தாகுளம் பிரதான சாலை,   தாமோதரநகர், குறிஞ்சி நகர், அன்னை தெரசாநகர், ராஜூவ் நகர், மில்லர்புரம் அரசு அலுவலர் குடியிருப்பு,  சிதம்பரநகர், பிரையன்ட்நகர், சுப்பையாமுதலியார் புரம், திருச்செந்தூர் சாலை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai