Enable Javscript for better performance
ஸ்ரீவைகுண்டம் வடகாலில் தூர்வாரும் பணி- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீவைகுண்டம் அணையின் வடகால் பகுதி முழுவதும் மணல்மேடாகி அமலை மற்றும் பாசிபடர்ந்த நீர் செடிகள் அதிக அளவில் உள்ளன.

    மேலும் அதன் இருபுறமும் உள்ள கரையோரங்களில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பட்டுபோன மரங்களில் வளரும் காட்டுச் செடிகளாலும் ஒடிந்து விழும் மரங்களாலும் தண்ணீரின் நீரோட்டம் குறைந்து பாசன குளங்களுக்கு தண்ணீர் செல்லுவதில் தடை ஏற்பட்டு வந்தது.

    இதுகுறித்து தினமணி நாளிதழில் பலமுறை சுட்டிக் காட்டப்பட்டது. தற்போது கோரம்பள்ளம் குளத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டும் வடகாலில் உள்ள ஆக்கிரமிப்புகளால் குளத்துக்கு தண்ணீர் சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டது.

    இந்நிலையில் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட செயற் பொறியாளர்(பொறுப்பு) தமிழ்செல்வன் வடகால் பகுதி முழுவதையும் பார்வையிட்டு ஏரல் வரையுள்ள வடகால் பகுதியில் அமலை மற்றும் பாசி படர்ந்த நீர் செடிகளும் தண்ணீரில் விழுந்து தண்ணீரின் போக்குக்கு தடையாக உள்ள மரங்களையும் அப்புறப்படுத்த மாவட்ட வன அலுவலரிடம் அனுமதி பெற்றார்.

    இதை தொடர்ந்து தண்ணீரில் விழுந்துள்ள மரங்களை வெளியே எடுத்து கரை ஓரங்களில் போட்டு டிராக்டர்கள் மூலம் பாசி படர்ந்த நீர் செடிகளை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    செயற் பொறியாளர்(பொறுப்பு) தமிழ்செல்வனின் நடவடிக்கைக்கு நன்றியும் பாராட்டும்  தெரிவித்துள்ள விவசாயிகள், வறண்ட நிலையிலுள்ள மற்ற பாசன குளங்களுக்கு தண்ணீர் திறந்து விடவும் ஸ்ரீவைகுண்டம் அணையில் ஆக்கிரமித்துள்ள அமலைச் செடிகளை அகற்றி தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கைவிடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai