Enable Javscript for better performance
அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் சுதந்திர தின விழா- Dinamani

சுடச்சுட

    

    அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் சுதந்திர தின விழா

    By தூத்துக்குடி  |   Published on : 16th August 2013 01:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சுதந்திர தின விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் வியாழக்கிழமை தேசியக் கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

    தூத்துக்குடி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மேயர் எல். சசிகலாபுஷ்பா தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து, பள்ளி மாணவர்,மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட அவர் பல்வேறு துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

    விழாவில், துணைமேயர் சேவியர், ஆணையர் சோ.மதுமதி, பொறியாளர் ராஜகோபால், உதவி செயற்பொறியாளர் சரவணன், மண்டலத் தலைவர் வெள்ளைப்பாண்டி உள்பட மாமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி சுங்கத் துறை அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு உதவி ஆணையர் பாரிவள்ளல் தலைமை வகித்தார். கூடுதல் ஆணையர் என்.ஜே. குமரேஷ் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

    தூத்துக்குடி மாவட்டம், இடையர்காடு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு ஊராட்சித் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சித் தலைவர் என். சின்னத்துரை தேசியக் கொடியை ஏற்றினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் சமாதானம், இடையர்காடு ஊராட்சி துணைத் தலைவர் சரவணன், அதிமுக நிர்வாகிகள் சேகர், சுதாகர், ரத்தனபாண்டி,தங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தூத்துக்குடி புனித லசால் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின

    விழாவுக்கு பள்ளி முதல்வர் ஆரோக்கியசாமி தலைமை வகித்தார். அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையர் எட்வின் ஜோ சிறப்பு விருந்தினராக கலந்து

    கொண்டு தேசியக் கொடி ஏற்றினார்.

    பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் ஜெனோ ரபேல், செயலர் வெலிங்டன்,

    முன்னாள் மாணவரும் வேம்பார் பள்ளி ஆசிரியருமான மாணிக்கராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி மூன்றாவது மைல் சக்தி வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் சக்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளியின் நிறுவனர் சண்முகம் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

    பள்ளியின் முதல்வர் ஜெயா சண்முகம், துணை முதல்வர் வீரலட்சுமி மற்றும் ஆசிரியைகள், மாணவர், மாணவிகள் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி சிவந்தி ஆதித்தனார் மெட்ரிகுலேசன் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தெட்சணமாற நாடார் சங்கச் செயலர் சண்முகவேல் தேசியக்கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.

    விழாவில் பள்ளிக் குழு உறுப்பினர்கள் ராமசாமி, லிங்கசெல்வன், ஜெயத்துரை, மாரியப்பன், பள்ளியின் முதல்வர் மாரியம்மாள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர், மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai