Enable Javscript for better performance
கோவில்பட்டியில் மாரத்தான் போட்டி - Dinamani

சுடச்சுட

    

    சுதந்திர தின விழாவையொட்டி, கோவில்பட்டியில் வியாழக்கிழமை மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.

    கோவில்பட்டி மத்திய நகர் அரிமா சங்கம் நடத்திய இப்போட்டியை ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜாமணி கொடியசைத்து தொடக்கி வைத்தார். எட்டயபுரம் சாலை  திருமண மண்டபத்தில் தொடங்கி, கருங்காலிப்பட்டி வரை சென்று, மீண்டும் தொடங்கிய இடத்துக்கு வந்து சேரும் வகையில், 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு போட்டி நடத்தப்பட்டது.

    போட்டியின் பொதுப் பிரிவில், காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் மேல்நிலைப் பள்ளி மாணவர் தங்கவேல்முருகன் முதலிடத்தையும், சென்னை எம்.சி.சி. கல்லூரி மாணவர் விக்னேஸ்வரன் 2-ம் இடத்தையும், தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மாணவர் பொன்மாரி 3-ம் இடத்தையும் பெற்றனர். பள்ளி மாணவர்களுக்கான பிரிவில் வல்லநாடு வி.டி.வி.டி. மேல்நிலைப் பள்ளி மாணவர் சம்பன் முதல் பரிசு பெற்றார்.

    பரிசளிப்பு விழாவிற்கு கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவி பேச்சியம்மாள்தங்கப்பாண்டியன் தலைமை வகித்தார். கோவில்பட்டி காவல் துறை துணை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

    விழாவில், வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ், மத்திய நகர் அரிமா சங்கத் தலைவர் செல்வமோகன், செயலர் கார்த்திக், பொருளாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஆர்.சீனிவாசகம், திலகராஜ் ஆறுமுகச்சாமி உள்ளிட்ட பலர் கல்நது கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai