Enable Javscript for better performance
கோவில்பட்டி பகுதிகளில் சுதந்திர தின விழா - Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டி பகுதிகளில் சுதந்திர தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

    கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் கதிரேசன் தேசியக் கொடியை ஏற்றினார்.

    வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வட்டாட்சியர் ரமேஷ் தேசியக் கொடியை ஏற்றினார்.

    ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஊராட்சி ஒன்றியத் தலைவி பேச்சியம்மாள்தங்கப்பாண்டியன் தேசியக் கொடியை ஏற்றினார். 

    நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்றத் தலைவி ஜான்சிராணி தேசியக் கொடியை ஏற்றினார். 

    எஸ்.எஸ்.துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், நாடார் உறவின்முறை சங்கப் பொருளாளர் சுரேஷ்குமார் தேசியக் கொடியை ஏற்றினார். கோவில்பட்டி பாண்டவர்மங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் அலுவலகம் முன் நடைபெற்ற விழாவில், சங்கத் தலைவர் அன்புராஜ் தேசியக் கொடியேற்றினார்.

    அரசு அலுவலக வளாகத்தில் உள்ள சார்பு நீதிமன்றம் முன் அமைந்துள்ள மைதானத்தில் மாவட்ட உரிமையியல் நீதிபதி சரத்ராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்தில் கோட்டப் பொறியாளர் பிளோமினாசாந்தி தேசியக் கொடியை ஏற்றினார். பங்களாத் தெரு நகராட்சி தொடக்கப் பள்ளியில் பள்ளிக் குழுத் தலைவர் கமலா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

    அரசு மருத்துவமனையில் மருத்துவமனை கண்காணிப்பாளர் ருக்மணி தேசியக் கொடியை ஏற்றினார். 

    ராவிள்ள கே.ஆர்.அப்பாசுவாமி நாயுடு வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில், பள்ளி நிர்வாக அலுவலர் ருத்ரமூர்த்தி தேசியக் கொடியை ஏற்றினார்.

    பாண்டவர்மங்கலம் கஸ்தூரிபாய் காந்திஜி மகளிர் மன்றம், இந்திய அரசு நேரு யுவகேந்திரா இளைஞர் விளையாட்டு அமைச்சகம் மற்றும் கோவில்பட்டி ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை சார்பில் பாண்டவர்மங்கலம் அண்ணா சிலை அருகில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

    கோவில்பட்டி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் சங்கத் தலைவர் ராஜேஷ்கண்ணன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

    கோவில்பட்டி அரசு கிளை நூலகத்தில் நூலகர் பூல்பாண்டி தலைமையில் நடைபெற்ற விழாவில், வாசகர் வட்டத் தலைவர் ராஜமாணிக்கம் தேசியக் கொடியை ஏற்றினார்.

    கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி, லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி, கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் முன்னாள் ராணுவ அதிகாரி கேப்டன் வி.சேவியர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

    விழாவுக்கு கே.ஆர். கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் கே.ஆர்.அருணாசலம் தலைமை வகித்தார்.

    ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளியில் பள்ளிச் செயலர் ராஜசேகரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். 

    காந்தி நகர் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில், சங்கத் தலைவர் முத்துராமன் தேசியக் கொடியை ஏற்றினார். நாடார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு நாடார் உறவின்முறை சங்கத் தலைவரும், பள்ளிச் செயலருமான பழனிசெல்வம் தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

    யு.பி. மெட்ரிக் பள்ளி மற்றும் வி.டி.எம். பசும்பொன் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்ற விழாவில், பாண்டிச்சேரி அரிமா கணேஷ்மூக்கையா மற்றும் அவரது குடும்பத்தினர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர்.

    ஐ.என்.டி.யூ.சி. சார்பில் இளையரசனேந்தல் சாலையில் உள்ள நூற்பாலை,  மருத்துவமனை மற்றும் ஏ.கே.எஸ். தியேட்டர் சாலையில் உள்ள சீனிவாசா மருத்துவமனை முன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களில் தேசியக் கொடியை சட்டப்பேரவை இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலர் கேசவன் ஏற்றினார்.

    கோ.வெங்கடசாமி நாயுடு கல்லூரி மற்றும் சுயநிதிப் பாடப்பிரிவு கல்லூரி வளாகத்தில் கல்லூரி முதல்வர் மாரியப்பன் தேசியக் கொடியை ஏற்றினார். சுயநிதிப் பாடப்பிரிவு கல்லூரி இயக்குநர் வெங்கடாசலபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் ஏ.பி.கே.பழனிசெல்வம் தேசியக் கொடியை ஏற்றினார்.

    கவுணியன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பசுவந்தனை சாலை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர் செல்வகிருஷ்ணன் தேசியக் கொடியை ஏற்றினார். நாடார் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு பத்திரகாளியம்மன் கோவில் தர்மகர்த்தா தங்கக்காளிராஜா தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றினார்.

    செயின்ட் ஆண்ட்ரூஸ் மெட்ரிக் பள்ளியில் பள்ளித் தாளாளர் ஆண்ட்ரூஸ்சாம்ராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

    கோவில்பட்டி மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் மந்தித்தோப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இம்மானுவேல் தேசியக் கொடியை ஏற்றினார்.

    எட்டயபுரம் மனநல காப்பகத்தில் கோவில்பட்டி ரோட்டரி சங்கத்தின் இணைச் சங்கமான நேஷனல் பொறியியல் கல்லூரி ரோட்ராக்ட் சங்க மாணவர்கள் சார்பில் எட்டயபுரம் முதியோர் மற்றும் மனநல காப்பகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு எட்டயபுரம் ரோட்டரி சங்கத் தலைவர் வீராச்சாமி தலைமை வகித்தார். தொடர்ந்து காப்பகத்தில் உள்ள முதியோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டன. கம்மவார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிச் செயலர் கதிர்வேல் தேசியக் கொடியேற்றினார். 

    புனித ஓம் கான்வென்ட் மெட்ரிக் பள்ளி மற்றும் கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவிற்கு நிர்வாக தாளாளர் லட்சுமணப்பெருமாள் தலைமை வகித்தார். பள்ளியில் பள்ளி இயக்குநர் முத்துக்குமரனும், கல்வியியல் கல்லூரியில் முதல்வர் (பொறுப்பு) பிரபாவதியும் தேசியக் கொடியேற்றினர்.

    எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப் பள்ளியில் பள்ளித் தலைமையாசிரியை சுசிலாதேவி தலைமையில், பள்ளித் தலைவர் எவரெஸ்ட் எம்.ராமச்சந்திரன் தேசியக் கொடியை ஏற்றினார்.

    ஸ்ரீஹரா வித்யா மந்திர் பள்ளியில் ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அதிகாரி ராதாகிருஷ்ணன் தேசியக் கொடியை ஏற்றினார். 

    குமாரகிரி சி.கே.டி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி துணை செயலர் சங்கரபாண்டியன், பள்ளி முதல்வர் நம்மாழ்வார் தலைமையில், பள்ளி சேர்மன் பாலகிருஷ்ணன் தேசியக் கொடியேற்றினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai