Enable Javscript for better performance
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில்...- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சுந்திர தின விழாவின்போது தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.

    தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சார்பில் 67-வது சுதந்திர தின விழா தலைமை அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவின்போது, வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான கே.பி. நாகேந்திர மூர்த்தி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    வங்கியின் இயக்குநர் அரவிந்தகுமார், வங்கியின் வணிக வளர்ச்சி துறையின் பொதுமேலாளர் செல்வன் ராஜதுரை, கணக்கியல் துறையின் பொதுமோலாளர் ராமசுப்பிரமணியன், கடன் துறையின் பொது மேலாளர் ராய் சுரேந்திரா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி, வங்கியின் மூலம் நலிவுற்ற பிரிவினர் மற்றும் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டது. தகுதியுள்ள மாணவர், மாணவிகளுக்கு கல்விக் கடன்கள் வழங்கப்பட்டன.

    வங்கியின் துணைப் பொது மேலாளர்கள், உதவிப் பொது மேலாளர்கள், தூத்துக்குடி மண்டல மேலாளர், தலைமை அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், பள்ளி மாணவர்,மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai