Enable Javscript for better performance
தூத்துக்குடியில் சுதந்திர தின விழா- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவின்போது பல்வேறு துறைகள் சார்பில் 55 பயனாளிகளுக்கு ரூ.5.18 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் எம். ரவிக்குமார் வழங்கினார்.

    தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் எம்.ரவிக்குமார் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மா. துரை முன்னிலை வகித்தார்.

    விழாவில் சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு ஆட்சியர் எம். ரவிக்குமார் பொன்னாடை அணிவித்து கெüரவித்தார். மேலும், வேளாண் துறை சார்பில் 12 பயனாளிகளுக்கும், மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில் 4 பயனாளிகளுக்கும், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் 5 பயனாளிகளுக்கும் என மொத்தம் 55 பயனாளிகளுக்கு ரூ.5,18,030 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

    இதுதவிர 108 அவசர சிகிச்சை வாகனத்தில் சிறப்பாக சேவையாற்றிய 2 அலுவலர்களுக்கும், சுகாதாரத் துறையில் 5 பேருக்கும், சிறுசேமிப்பு துறை பணிக்காக ஒருவருக்கும், வருவாய்த்துறையில் சிறப்பாக பணியாற்றிய 9 பேருக்கும் என 40 அலுவலர்களுக்கு, அவர்களது சேவையைப் பாராட்டி ஆட்சியர் எம். ரவிக்குமார் சான்றிதழ்களை வழங்கினார்.

    தொடர்ந்து பள்ளி மாணவர்,மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில்,  சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஸ்பிக்நகர் மேல்நிலைப் பள்ளி, விக்டோரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப் பள்ளி, ஏபிசி வீரபாகு

    மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி, சிறுமலர் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்,மாணவிகள் கலந்து கொண்டனர்.

    விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா. முத்து, மக்கள் தொடர்பு அலுவலர் இரா. பாஸ்கரன் மற்றும் காவல் துறை உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

    சமபந்தி விருந்துசுதந்திர தின விழாவையொட்டி தூத்துக்குடி சிவன்கோவிலில் வியாழக்கிழமை நடைபெற்ற சமபந்தி நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. சி.த.செல்லபாண்டியன் கலந்து கொண்டார்.

    சுதந்திர தினவிழாவை முன்னிட்டு சங்கரராமேஸ்வரர் என அழைக்கப்படும் தூத்துக்குடி சிவன் கோவிலில் சிறப்பு அன்னதானத்துடன் கூடிய சமபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவுக்கு, கோவில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரன் தலைமை வகித்தார். உதவி ஆணையர் செல்லதுரை, கோவில் ஆய்வாளர் நயினார், துணைமேயர் சேவியர், மண்டலத் தலைவர் கோகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். செல்வம்பட்டர் சிறப்பு வழிபாடு நடத்தினார். விழாவில், எம்.எல்.ஏ. சி.த.செல்லபாண்டியன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பக்தர்களுக்கு உணவு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அதிமுக மாநகரச் செயலர் ஏசாதுரை, மாமன்ற உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகிகள், கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai